தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் மக்களை சோகத்தில் ஆழ்த்திய வயதான தம்பதி...! - தம்பதியர்கள் தற்கொலை

கரூர்: சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்த வயதான தம்பதி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தம்பதியர்கள் விஷம் அருந்தி தற்கொலை

By

Published : Apr 30, 2019, 9:22 AM IST

கரூர் நகராட்சிக்குட்பட்ட வஞ்சியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் (80) - வள்ளியம்மாள் (70) தம்பதி. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்திற்கு கூலி ஆட்கள் அமர்த்தி தரும் முகவர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், முருகனுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளம் ஒன்றில் துண்டிப்பு ஏற்பட்டதால் இது தொடர்பாக மருத்துவச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சையில் போதிய முன்னேற்றம் ஏற்படாததால் மனமுடைந்த அவர் தனது மனைவியுடன் தென்னை மரத்திற்கு வைத்திருந்த குருணை மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

தம்பதி விஷம் அருந்தி தற்கொலை

இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் காவல் துறையினர் இருவரது உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details