கரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திருப்பூர் நகர துணை ஆணையாளராக பணியாற்றிவந்த பி.சுந்தரவடிவேல், பதவி உயர்வு பெற்று கரூர் காவல் கண்காணிப்பாளராக ஜூன் 5ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
வரவேற்பு
கரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திருப்பூர் நகர துணை ஆணையாளராக பணியாற்றிவந்த பி.சுந்தரவடிவேல், பதவி உயர்வு பெற்று கரூர் காவல் கண்காணிப்பாளராக ஜூன் 5ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
வரவேற்பு
இதனையடுத்து இன்று (ஜூன்.10) கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பி.சுந்தரவடிவேல் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக தான்தோன்றிமலையில் உள்ள கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், காவல் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் புதிதாக பொறுப்பேற்ற காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.