கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன கவுண்டனூர் பகுதியில் வசித்துவரும் பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, சாலை, சாக்கடை, சுடுகாட்டுக்கு பாதை, கழிவறை உள்ளிட்டவை இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதைக் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மாவட்ட அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.