கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சாமானிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகம், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சுற்றுச்சூழல் தொடர்பாக குரல் கொடுத்து வருகிறேன். எப்பொழுதும் மக்கள் என்னை அணுகக்கூடிய எளிமையான நபராக இருப்பேன். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. எனவே மக்கள் சேவையாற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன். சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராக மக்கள் மனதில் இடம் பிடிப்பேன்." என்று கூறினார்.
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை - சாமானிய மக்கள் கட்சி வேட்பாளர்
கரூர்: ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களுக்கு எதுவும் செய்யாததால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக சாமானிய மக்கள் கட்சி வேட்பாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
karur
Last Updated : Mar 13, 2021, 7:20 PM IST