கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் சிறப்பாக கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அதற்காக தகுதியான வரை தேர்வு செய்து சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருதினை பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் தொகையுடன் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த 2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' வழங்குவதற்கு உரிய விருதாளர் தேர்வு செய்யப்பட உள்ளது.
எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரத்துடன் முழு முகவரியுடன் 31.10.2020-க்குள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:பெரியார் நெஞ்சில் தைத்த முள் பிடுங்கப்பட்டது; ஆனால் காயம் ஆறவில்லை!