கரூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பெண்களுக்கான சேவை, பாதுகாப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா மன்மங்கலம், வட்டாட்சியர் செந்தில், அன்பு கரங்கள் நிர்வாகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆட்சியர் அன்பழகன் கூறும்போது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தேவைப்படும் ஆலோசனைகள் உடனடியாக வழங்கப்படும். கரூர் வெண்ணைமலை அன்புக்கரங்கள் இல்லத்தில் இந்த மையம் இயங்கி வருகின்றது.
இந்த மையத்தின் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான அவசரத் தேவை, ஆலோசனைகள், புகார் அளிக்கும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ வசதி, சட்ட உதவிகள், மனநல ஆலோசனைகள், தற்காலிகமாக தங்கும் வசதி ஆகியவைகள் செய்து கொடுக்கப்படும்.
பெண்களுக்கான சேவை, பாதுகாப்பு மையத்தினை ஆட்சியர் அன்பழகன் பார்வை பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மையத்தின் மூலம் இதுவரை 22 பெண்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை: நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை