தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போராட்டம்

கரூர் :ஆர்.எம்.எஸ். தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று சிஐடியு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

citu post 12demands sent postal
citu post 12demands sent postal

By

Published : Jun 10, 2021, 10:40 PM IST

நாடு முழுவதும் சிஐடியு தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 1ஆம் தேதிமுதல் பிரதமருக்கு கோரிக்கைகளை அனுப்பும் மகஜர் என்னும் பரப்புரை இயக்கம் தொடங்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கரூர் ஆர்.எம்.எஸ். தலைமை அஞ்சலகம் முன்பு இன்று சிஐடியு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை பிரதமருக்கு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் சி. முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details