தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய தேர்தல் அலுவலர்..! - தேர்தல் வெற்றி பெற்ற வேட்பாளர் சான்றிதழ் வழங்குதல்

கரூர்: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு கரூர் தேர்தல் அலுவலர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

Election winning Certificate Distribution
Election winning Certificate Distribution

By

Published : Jan 3, 2020, 8:46 AM IST

கரூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை, தோகமலை ஆகிய எட்டு ஊரக உள்ளாட்சி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

அதில், திருகாட்டுதுறை, வேட்டமங்கலம் உள்ளிட்ட பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றதையடுத்து கரூர் ஒன்றிய தேர்தல் அலுவலர் உமா சங்கர் அவர்களுக்கான வெற்றிபெற்ற சான்றிதழ்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், வருகின்ற 11ஆம் தேதி பஞ்சாயத்து துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும், அதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

சான்றிதழ் வழங்கும் தேர்தல் அலுவலர்

மேலும் காத பாறை, நெரூர் தென்பாகம், வடபாகம் மண்மங்கலம் நன்னியூர் போன்ற ஊராட்சி பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

வாக்கு எண்ணிக்கை: கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கும் ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details