அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோவை ஆதரித்து, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜி, நொய்யல் குறுக்குசாலை, குப்பம், எலவனூர், பள்ளப்பட்டி பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, “25 ஆண்டுகள் மக்கள் சேவை ஆற்றி வருகிறேன். கடுஞ்சொற்களை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியதில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதில்லை. ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் என் பல்லை உடைப்பேன் எனப் பேசியிருக்கிறார். அதுகுறித்து ஏன் நீங்கள் பதிலளிக்கவில்லை என்று சில பேர் கேட்கின்றனர். அதற்கு பதில் வரும் 6 ஆம் தேதி வாக்காளர்கள் அளிப்பார்கள்.