கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன், முன்னிலையில் வெற்றிபெற்ற சான்றிதழை வாங்கிவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
செந்தில் பாலாஜிக்கு நன்றி : ஜோதிமணி - முதல் பெண் எம்பி
கரூர்: தேர்தலில் என்னுடன் இருந்து பணியாற்றிய செந்தில் பாலாஜி உட்பட அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
ஜோதிமணி
அப்போது, 'கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
மேலும், தேர்தலில் என்னுடன் இருந்து பணியாற்றிய செந்தில் பாலாஜி உட்பட அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.