தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!

கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!!
வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!!

By

Published : May 1, 2021, 12:05 PM IST

கரூர்: அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர், குளித்தலை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் எட்டு லட்சத்து 99 ஆயிரத்து 236 வாக்காளர்களில், ஏழு லட்சத்து 55 ஆயிரத்து 34 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!!

இதனால் கரூர் மாவட்டத்தில் 83.96 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டமே வாக்குப்பதிவில் முதலிடத்தில் இருகிறது.

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவுக்குப் பின்னர் மின்னணு வாக்குப் பெட்டிகள் வேட்பாளர்கள், வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல்வைக்கப்பட்டன.

கடந்த 25 நாள்களாக மூன்றடுக்குப் பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு, முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் ஆகியோரின் 24 மணி நேர நேரடிக் கண்காணிப்பு எனப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே நாளை காலை 8 மணியளவில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணியில் சுமார் ஐந்தாயிரத்து 147 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதையும் படிங்க: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி!

ABOUT THE AUTHOR

...view details