தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் எலியுடன் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்; 1 கோடி கொசுக்களை ஒழிப்பதாகவும் சபதம்! - கரூர் சுயேட்சி வேட்பாளர்

கரூர் மாநகராட்சியில் எலியுடன் நூதன முறையில் சுயேச்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளார்.

எலியுடன் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்
எலியுடன் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

By

Published : Feb 2, 2022, 6:49 PM IST

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 26ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன். இரண்டு நாள்களுக்கு முன்பு சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று (பிப் 02) காலை தான் போட்டியிடும் பகுதியிலுள்ள பிரசித்திபெற்ற முருகன் ஆலயத்தில் வழிபாடு நடத்தி நண்பர்களுடன் வாக்கு சேகரிப்பைத் தொடங்கினார்.

அப்போது வாக்காளர்களைக் கவரும் வகையில் கூண்டில் அடைபட்ட எலியுடன் வாக்கு சேகரித்தார். மேலும் வாக்கு சேகரிக்கும் ஒவ்வொருநாளும் நூதன திட்டத்தை அறிவிப்பு செய்து, வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

'1 கோடி கொசுக்களை ஒழிப்பேன்':இன்று முதல் நாளில், தான் போட்டியிடும் வார்டுகளில் ஒரு கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான்பூச்சிகள், ஆயிரம் எலிகள், 100 தெருநாய்கள் ஆகியவற்றை ஒழித்து, சுகாதாரமான பகுதியாக உருவாக்கிடும் வகையில், உறுதிமொழி அளிக்கும் துண்டறிக்கையை வாக்காளர்களுக்கு விநியோகித்து வாக்கு சேகரித்தார்.

எலியுடன் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

அரசியல் கட்சிகள் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யத் தொடங்காத நிலையில் கரூர் மாநகராட்சி 26 வார்டு சுயேச்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் வேட்புமனுதாக்கல் முடித்து, நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:எலிப்பொறியுடன் மனுதாக்கல் செய்த ஏர்கிராஃப்ட் இன்ஜினியர் - இது மதுரை சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details