கரூர் பரமத்தி அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராம்பிரகாஷ். தோகைமலை அருகே உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் அகரம் கிராமம் சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த எம்சிஏ பட்டதாரியான மணிமேகலையை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தனுசித்ரன் (6) விசித்ரன் (3) என இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில், ராம்பிரகாஷ் தனது அண்ணன் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு முற்றியது. இதில், ஆத்திரமடைந்த மனைவி தனது தந்தையின் வீட்டிற்கு சென்று சிலகாலம் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த தினங்களுக்கு சில முன்பு மனைவியை சமாதானப்படுத்தி தன்னுடன் அழைத்து வந்துள்ளார். ஆனால், ராம்பிரகாஷ் திருமணத்தை மீறிய உறவை மீண்டும் தொடர்ந்ததால் இருவருக்குமிடையே மார்ச் 27ஆம் தேதி மதியம் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ராம்பிரகாஷ் தனது மனைவியை தாக்கி விட்டு வீட்டிலிருந்து வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது.