அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கியது. அரவக்குறிச்சியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில், நேற்று மட்டும் 8 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை அரவக்குறிச்சி சட்டப்பேரவை தேர்தல் அலுவலகத்தில் 76க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சுயேச்சை வேட்பாளர்கள் வாங்கி சென்றுள்ளனர்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் - அதிக சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்! - சட்டமன்ற இடைத்தேர்தல்
கரூர்: அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட அதிகளவிலான சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்ய இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் கடைசி நாளான ஏப்ரல் 29ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிகளவில் சுயேச்சைகள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் மட்டும் 42 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.