தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர்: சுகாதாரமின்றி உணவு தயாரித்த ஹோட்டலுக்குச் சீல்! - கரூர்

கரூரில் சுகாதாரமின்றி உணவு தயாரித்து விற்பனை செய்த அசைவ உணவகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

seal
seal

By

Published : May 4, 2022, 7:05 PM IST

கரூர்: கரூரில் உள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு, கரூர் மாநகராட்சி சுகாதாரத்துறை நல அலுவலர் மருத்துவர் லட்சியவர்ணா தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் சுகாதாரமின்றி உணவு தயாரிக்கப்பட்டதும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் உணவக உரிமையாளருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து, உணவகத்திற்குச் சீல் வைத்தனர்.

கரூர் மாநகராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், காய்கறி கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதையும் படிங்க:திருவண்ணாமலை லாக் அப் டெத்: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details