கரூர்: கரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தி உலக சாதனை படைத்தவர் ஸ்டாலின் என அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
உலக சாதனை படைத்தவர் ஸ்டாலின் - அமைச்சர் காந்தி
இரண்டு மாதத்திற்குள் கரோனா இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வந்து தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை இல்லாத உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் என தெரிவித்தார்.
கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலை புத்தாம்பூரில் அமைந்துள்ள கரூர் ஜவுளி பூங்காவில், இன்று (ஜூலை 20) மாலை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கரூர் மாவட்ட தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
நெசவாளர்களுக்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கும் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்தும் நெசவாளர்களிடம் அமைச்சர் கேட்டு அறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பீலா ராஜேஷ், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர், கரூர் ஜவுளி பூங்கா நிர்வாக குழு தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, திமுக நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் மற்றும் கரூர் மாவட்ட நெசவாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கைத்தறி துறை அமைச்சர் காந்தி, தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பொழுது கரோனா வைரஸ் தொற்று இங்கு 24 ஆயிரமாக இருந்தது. படிப்படியாக 38,000 பேருக்கு நாள் ஒன்றுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்தது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது நாள் ஒன்றுக்கு 2,000 பேர் என கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது.
இரண்டு மாதத்திற்குள் கரோனா இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வந்து தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை இல்லாத உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் என தெரிவித்தார்.