தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வில் வெற்றி! மாற்றுத்திறனாளி மாணவர் சாதனை! - எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்

கரூர்: மாற்றுத்திறனாளி மாணவர் கார்வண்ணன் நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி பிரிவில் மாநிலத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில 5ஆவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

neet exam

By

Published : Jun 6, 2019, 5:04 PM IST

நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நேற்று (ஜுன் 5) வெளியிடப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் கார்வண்ணன் பிரபு நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி பிரிவில் மாநிலத்தில் முதல் இடத்தையும் இந்திய தேசிய அளவில் 5ஆவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கார்வண்ணன் பிரபு பன்னிரெண்டாம் வகுப்பு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்தார். 12ஆம் வகுப்பில் 476 மதிப்பெண் எடுத்து அவர், நீட் தேர்வில் 720 க்கு 572 மதிப்பெண் எடுத்து மாற்றுத்திறனாளி பிரிவில் தமிழ்நாட்டில் முதலிடத்தையும் இந்திய தேசிய அளவில் மாற்றுத்திறனாளி பிரிவில் ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நீட் தேர்வில் வெற்றி! மாற்றுத்திறனாளி மாணவன் கார்வண்ணன்

இது குறித்து கார்வண்ண பிரபு ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், 'நீட் தேர்வு கடினமானது அல்ல. அதனை சரியான கண்ணோட்டத்தில் 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் சரியாக படித்தாலே எளிமையாக வெற்றிபெற முடியும்.

நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்வது தவறு. மேலும், நீட் தேர்வில் மூன்று விதமான பிரிவுகளில் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மறுமுறை நாம் தேர்ச்சி பெறலாம். அதற்கு தற்கொலை தீர்வாகாது.

நீட் தேர்வில் வெற்றிபெற சிபிஎஸ்சி பாடப்புத்தகத்தில் என்சிஆர்டி பாடங்களை படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். மேலும் பிற்காலத்தில் மனநிலை மருத்துவராகவோ அல்லது நரம்பியல் மருத்துவராக சேவை செய்வேன்' எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details