கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜோதிமணியை ஆதரித்து கரூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள்இந்த முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
தம்பிதுரை வாக்காளர்களுக்கு ஒரு பவுன் தங்கம் தருவார் - செந்தில் பாலாஜி விமர்சனம் - ஒருபவுன் தங்கம்
கரூர்: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை வாக்காளருக்கு ஒரு பவுன் தங்கம் தருவார் என எதிர்பார்க்கிறேன் என்று செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நம்ம ஊரு பொண்ணு. அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை போல் கிருகிஷ்ணகிரியில் இருந்த வந்தவர் இல்லை. தம்பிதுரைக்கு 45 கல்லூரிகள் உள்ளது. தற்போது கூட ஒரு மருத்துவ கல்லூரி கட்டி வருகிறார். இந்த கல்லூரியில் நமது பகுதியை சேர்ந்த ஒரு மாணவருக்காவது இலவசமாக சீட் வழங்கியுள்ளரா? மேலும் கட்சியினருக்கு இரண்டு பவுன் தங்கம் வழங்கியுள்ளது போல, தொகுதியை சேர்ந்த மக்களாகிய உங்களுக்குஒரு பவுன் தங்கம் தருவார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.