தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடி வெள்ளி அம்மன் தரிசனத்திற்கு சென்ற பெண்ணின் தாலிக்கொடி பறிப்பு!

கரூர் மாரியம்மன் கோயிலில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணின் ஐந்து பவுன் தாலிக்கொடி பட்டப்பகலில் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

gold chain thjeft in karur mariyamman temple aadi friday festivel
ஆடி வெள்ளி அம்மன் தரிசனத்திற்கு சென்ற பெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு

By

Published : Jul 30, 2021, 11:25 AM IST

கரூர்:பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கரூர்நகரப் பகுதியில் அமைந்துள்ளது. ஆடி இரண்டாம் வெள்ளியான இன்று (ஜூலை.30) பக்தர்கள் கூட்டம் இக்கோயிலில் அதிகரித்து காணப்பட்டது. கரூரை அடுத்த பசுபதிபாளையம் அருணாச்சல நகர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி (50) தனது மகள், பேரக்குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்துள்ளார்.

கோயில் வாசலில் கூட்டத்தோடு கூட்டமாக குனிந்து அம்மனுக்கு அவர் சூடம் ஏற்றிய நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலிக்கொடியை லாவகமாகக் கழட்டி எடுத்துச் சென்றுள்ளார்.

ஆடி இரண்டாம் வெள்ளியான இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததும், சம்பவ இடத்தில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இல்லாத காரணத்தாலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், கரூர் நகர காவல் நிலைய காவலர்கள், தனலட்சுமியிடம் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். தற்போது கோயிலில் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது பாய்ந்த போக்சோ!

ABOUT THE AUTHOR

...view details