தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 23, 2020, 12:11 AM IST

ETV Bharat / state

தனியார் குடோனில் விநாயகர் சிலைகள் கண்டெடுப்பு: போலீசார் தீவிர கண்காணிப்பு

கரூர்: விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தனியார் குடோனில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு
விநாயகர் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு

கரூர் மாவட்டம் அருகேயுள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் சென்ற ஆண்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் பயன்படுத்தப்படாத விநாயகர் சிலைகள், மலைவீதியில் உள்ள கலையரசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வைக்கப்பட்டிருந்தது.

இதனை அறிந்த அப்பகுதிமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறையினர், வருவாய்த்துறையினர் 5 அடி உயரம் முதல் 7 அடி உயரம் வரை உள்ள 31 விநாயகர் சிலைகள் இருப்பதை கண்டறிந்தனர்.

விநாயகர் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு

கரோனா பாதிப்பால் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு உயர் நீதிமன்றம் தடைவித்துள்ளது. எனவே காவல் துறையினர் விநாயகர் சிலைகள் இருக்கும் குடோனின் முன்பு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மண்டியிட்டு விநாயகரை வணங்கிய யானைகள்!

ABOUT THE AUTHOR

...view details