தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ - newstoday

கிருஷ்ணராயபுரம் தனி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கீதா மணிவண்ணன் திமுகவில் இணைந்தார்.

EX MLA Geetha Manivannan
முன்னாள் எம்எல்ஏ கீதா மணிவண்ணன்

By

Published : May 9, 2021, 7:33 PM IST

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கீதா மணிவண்ணன். அத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் ஐயரை 35,031 வாக்குகள் வித்தியாசத்தில் தேற்கடித்தார்.

அதிமுகவில் செந்தில்பாலாஜியின் தீவிர விசுவாசியாக இருந்த கீதா மணிவண்ணன் கரூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக இருந்த பொழுது 2016ஆம் ஆண்டு முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுக சார்பில் போட்டியிட்டார்.

2021ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு மறுத்த நிலையில், அதற்கு காரணம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான் என வேட்பாளர் அறிவிப்புக்குப் பின்னர் கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் கீதா.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கீதா மணிவண்ண

இத்தேர்தலில் கீதாவை போலவே, 2011ஆம் ஆண்டு கிருஷ்ணராயபுரம் தனித்தொகுதியில் திமுக வேட்பாளர் பி.காமராஜை சுமார் 22,509 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த அதிமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் எதிர்பார்ப்பில் இருந்தார். அவர் பெயரும் வேட்பாளர் பட்டியலில் வரவில்லை என்பதால் உடனே செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதனைத்தொடர்ந்து, தேர்தல் பரப்புரையின்போதே திமுகவில் கீதா மணிவண்ணன் இணைவார் என பரவலாக பேசப்பட்ட நிலையில், சென்னையில் இன்று(மே.9) காலை 9 மணிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கதுறை அமைச்சருமான செந்தில்பாலாஜி முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கரூர் மாவட்ட அதிமுக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இதையும் படிங்க: லேன்செட் அறிக்கை சுட்டி பிரதமர் மோடியை விமர்சிக்கும் எம்.பி.

ABOUT THE AUTHOR

...view details