உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி - உணவு பாதுகாப்பு
கரூர்: உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பேரணியாக சென்றனர். பேரணியில் உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் தீமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு, பல்வேறு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். பேரணியின் நிறைவில் உணவு பாதுகாப்போம், உணவை வீணாக்குவதை தவிர்ப்போம் போன்ற உறுதி மொழி பலகையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கையொப்பமிட்டார். தொடர்ந்து பல்வேறு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கையொப்பமிட்டனர்.