தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளித்தலையில் வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.97 ஆயிரம் பறிமுதல்! - Rs 97,000 confiscated in Kulithalai

கரூர்: குளித்தலை அருகே உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட 97 ஆயிரத்து 500 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

குளித்தலையில் ரூ.97 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றிய பறக்கும் படையினர்  தேர்தல் பறக்கும் படையினர்  குளித்தலையில் ரூ.97 ஆயிரம் பணம் பறிமுதல்  தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்  Flying squad seizes Rs 97,000 cash in Kulithalai  Rs 97,000 confiscated in Kulithalai  Violation of the Code of Electoral Conduct
Flying squad seizes Rs 97,000 cash in Kulithalai

By

Published : Mar 20, 2021, 9:39 AM IST

கரூர் மாவட்டம், குளித்தலை ரயில்வே கேட் பகுதியில் பறக்கும் படை அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேனில் வந்த பன்னீர் செல்வம் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் உரிய ஆவணங்களின்றி 97 ஆயிரத்து 500 ரூபாய் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கலியமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் கைப்பற்றப்பட்ட பணம் பாதுகாப்பிற்காக சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பறக்கும் படை அலுவலர் அமுதா தலைமையிலான குழுவினர் வாங்கல் அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட இரண்டு லட்சம் ரூபாயை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இருசக்கர வாகன ஓட்டிகளை குறிவைத்து பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'நாங்க ஜெயிக்க நாடார் ஓட்டே போதும்' - ஹரி நாடாருடன் சிறப்பு நேர்காணல்

ABOUT THE AUTHOR

...view details