தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் மின் கோபுரம் பிரச்னை தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு

உயர் மின் கோபுரம் பிரச்னை குறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

farmers petition regarding tower to minister Senthil Balaji
farmers petition regarding tower to minister Senthil Balaji

By

Published : May 17, 2021, 9:24 AM IST

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர்மின் கோபுரங்கள் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், சந்தை மதிப்பில் இழப்பீடு, 100 விழுக்காடு ஆதாரத் தொகை, மாத வாடகை, விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ மீட்டர் உயர்மின் கோபுரம் திட்டப்பணிகளை, வழக்குகள் முடிவடையும் வரை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் கூறப்பட்டிருந்தன. இம்மனுவினை நேற்று (மே. 16) விவசாயிகள், தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சந்தித்து அளித்தனர்.

செந்தில் பாலாஜியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
கோரிக்கைகள் குறித்து தெளிவாக கேட்டு குறிப்புகளை எடுத்துக் கொண்ட அமைச்சர், சென்னை சென்றதும் முதலமைச்சர், அலுவலர்களுடன் ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நிறுவனர், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோடந்தூர் ராஜாமணி, பழனிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனிடயே, இந்திய மருத்துவர்கள் சங்கத்தை (IMA) சேர்ந்த கரூர் மாவட்ட நிர்வாகிகள், மருத்துவர்களுடன், கரூர் மாவட்டத்தில் கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதம், ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கைகள் எடுப்பது, ரெம்டெசிவர் மருந்துகள் விநியோகம் ஆகியவற்றை குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details