கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
'மிஸ்டர் எடப்பாடி நீங்க துரோகத்தைப் பற்றி பேசலாமா?' - செந்தில்பாலாஜி
கரூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜியை துரோகி என்று கூறினார். துரோகத்தைப் பற்றி அவர் பேசலாமா? என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வியெழுப்பினார்.
File pic
அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் பழனிசாமி செந்தில்பாலாஜியை துரோகி என்று கூறினார். துரோகத்தைப் பற்றி நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) பேசலாமா என்று அப்போது கேள்வி எழுப்பினர். மேலும் தேர்தலுக்கு முன்பே பழனிசாமி அதிமுக தோற்றுவிடும் என்று முடிவு செய்துவிட்டார்.
ஐம்பது ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவுக்கு வாங்கியக் கடனை பாஜக ஐந்து ஆண்டு காலத்தில் வாங்கிவிட்டது என்று அப்போது கூறினார்.