தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அகில இந்திய காங்கிரஸ் சார்பாக சமத்துவப் பொங்கல் விழா! - மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம்

கரூர்: வர்த்தக காங்கிரஸ் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட சமத்துவப் பொங்கல் விழா கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு வெகு சிறப்பாக நடைபெற்றது.

Equality Pongal
Equality Pongal

By

Published : Jan 14, 2020, 10:04 AM IST

கரூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மொடக்குறிச்சி பழனிச்சாமி கூறுகையில், சமத்துவப் பொங்கல் என்றால் அது தமிழர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் பொங்கலாக அமைய வேண்டும் என்று தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் சார்பாக சமத்துவப் பொங்கல் விழா

மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: டிக் டாக் செயலிக்கு எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details