தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலிருந்து விழுந்த ஊழியர் பலி.. - பசுபதிபாளையம்

பசுபதிபாளையம் அருகே மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலிருந்து விழுந்த ஊழியர் பலி
மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலிருந்து விழுந்த ஊழியர் பலி

By

Published : Nov 19, 2022, 2:16 PM IST

கரூர்: தான்தோன்றிமலை அசோக் நகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்கண்ணன் (32). இவர் மின்சார வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை 11 மணியளவில் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரில் மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து மின் கம்பத்திலிருந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மின்வாரிய ஒப்பந்த பணியாளரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நீலகிரி வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து - 7 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details