இதில், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், பல்வேறு மின்சார ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாநாடு குறித்து மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறும்போது, ’மின்சாரத் துறை பொதுப்பணித் துறையாக இருக்க வேண்டும், மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான கொள்கையின் விளைவாக அனைத்து மாநிலங்களிலும் மின்சார வாரியங்கள் அவலநிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனால், மின்சார வாரியத்தை சந்தைப் பொருளாக பயன்படுத்தும் அபாயம் ஏற்படும்' எனக் கருத்துக் கூறினார்.
தமிழ்நாடு மின் ஊழியர் 10ஆவது மாநாடு - மாநாடு
கரூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கரூர் கிளையின் சார்பாக 10ஆவது மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாடு மின்வெட்டு இல்லாத மாநிலமாக உள்ளது என மின் துறை அமைச்சர் கூறிக் கொண்டே இருக்கிறார். ஆனால் இன்னும் நகர்புறங்களில் மின்வெட்டு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது என விமர்சனம் செய்தார்.
மேலும், கால அடிப்படையில் பணிபுரியும் மின்சார ஊழியர்களை அரசு நிரந்தரமாக்கும் என மின்துறை அமைச்சர் கூறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அது வரவேற்கத்தக்க விஷயம் எனப் பாராட்டி பேசினார். ஆனால் அது உண்மையில் கிடைக்குமா? என்றால் அது கேள்விக்குறியே என்று சந்தேகக் கேள்வியும் எழுப்பினார்.