கரூர் மாவட்டம் ஓந்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் செந்தில்குமார் (35). இவர் மின்சார ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
மின்சாரம் தாக்கியதில் மின்சார ஊழியர் உயிரிழப்பு! - மின்சார ஊழியர் உயிரிழப்பு
கரூர்: பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி மின்சார ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கரூர் தாந்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரில் மோகன் என்பவரின் வீட்டில் செந்தில்குமார் பணியில் ஈடுபட்டிருந்தார். வழக்கம் போல இன்று (ஜூலை 29) வேலைக்குச் சென்ற செந்தில்குமார் முதல் மாடியில் உள்ள சுவரில் துளையிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோன்றிமலை காவல் துறையினர் செந்தில்குமார் உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:திருந்தி வாழ்ந்த முன்னாள் ரவுடி வெட்டி படுகொலை!