தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
அரவக்குறிச்சியில் தபால் ஓட்டு செலுத்திய தேர்தல் பணி அலுவலர்கள்! - தமிழ்நாடு
கரூர்: அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் 133 பேர் தங்களது வாக்குகளைத் தபால் மூலம் செலுத்தினர்.
அரவக்குறிச்சியில் தபால் ஓட்டு செலுத்திய தேர்தல் பணி அலுவலர்கள்!
இந்நிலையில், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் 133 பேர், பள்ளப்பெட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தபால் மூலம் தங்களது ஓட்டுகளை செலுத்தினர்.