கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
'அரவக்குறிச்சிக்கு எதுவும் செய்யாதவர் செந்தில்பாலாஜி' - எடப்பாடி குற்றச்சாட்டு - எடப்பாடி
கரூர்: "செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது அரவக்குறிச்சி தொகுதிக்கு எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை" என்று, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்போது மக்களிடம் அவர் பேசுகையில், "செந்தில்பாலாஜி முதலில் மதிமுகவில் இருந்து பின்னர் திமுகவிற்கு மாறி கவுன்சிலராக இருந்தார். பின்பு ஜெயலலிதா மூலம் அதிமுகவில் இணைந்து எம்எல்ஏ, அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். ஆனால், அரவக்குறிச்சி தொகுதிக்கு இதுவரை எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை.
செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலங்களில் ஸ்டாலினை சட்டசபையில் விமர்சித்தார். ஆனால், இப்போது திமுகவில் இணைந்து அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக நிற்கிறார். இப்படி பின்புலம் கொண்ட செந்தில்பாலாஜியை புகழ்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்வது வேடிக்கையாக உள்ளது" என்று விமர்சித்தார்.