தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 ஆண்டுவரை நீடிக்கும் குடிநீர் பிரச்னை: கரூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு! - உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு

கரூர்: கிருஷ்ணராயபுரம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நீங்காமல் இன்னும் நீடித்துவருவதால் தாங்கள் ஏன் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

due to water scarcity will boycott the local body election says karur people
கரூர் மக்கள்

By

Published : Dec 11, 2019, 10:41 PM IST

கரூரை அடுத்த கிருஷ்ணாபுரம் தொகுதிக்குள்பட்ட முத்துரங்கம்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காவிரி கூட்டுக் குடிநீரை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்து வந்த நிலையில் இதுவரை கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தவில்லை என்றும் மேலும் இது சம்பந்தமாக பலமுறை துறைச் சார்ந்த அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தற்போதுவரை நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால் சிறிதளவு தண்ணீரே வருவதாகவும் அதுவும் சுமார் ஒரு மணி நேரம் மட்டும் கிடைப்பதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் முத்துரங்கம்பட்டியில் வெறும் நான்கு தண்ணீர் குழாய்கள் மூலம் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் வீதத்தில் வழங்கப்படுகிறது.

இதனால் தொடர்ந்து நிலவிவரும் குடிநீர் பிரச்னையால் தாங்கள் ஏன் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அம்மக்கள் கேள்வியை முன்வைத்துள்ளனர். உடனடியாகத் தெருக்கு ஒரு தண்ணீர் குழாய் அமைத்துதந்து குடிநீர் பற்றாக்குறையை போக்கவில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் மக்களின் பேட்டி

இதையும் படியுங்க: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டும் சுயேச்சைகள்!

ABOUT THE AUTHOR

...view details