தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் தகராறு செய்த தம்பியை கொன்ற அண்ணன்! - drunken man

கரூர்: மது அருந்த பணம் கேட்டு தாயை மிரட்டி போதையில் தினமும் தகராறு செய்துவந்த தம்பியின் தலைமீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

krr

By

Published : Jun 5, 2019, 10:52 PM IST

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே ஆத்தூர் சோழி அம்மன் கோவில் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு நந்தகுமார் (21), கௌதமன் (19) என இரண்டு மகன்கள் உள்ளனர். இளையவரான கௌதமன் எப்பொழுதும் மதுவுக்கு அடிமையாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே கௌதமன் தினம்தோறும் மது போதையில் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தட்டிக்கேட்ட அவரது தாயை தகாத வார்த்தையில் பேசியும் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அவரது தாய் அண்ணன் நந்தகுமாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார், அதே பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் மது அருந்திவிட்டு போதையில் இருந்த கௌதமனிடம் விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பு தீவரமாகி, அண்ணன் நந்தகுமார் அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து கௌதமனை தலையில் தாக்கினார்.

தம்பியை கொலை செய்த அண்ணன்

இதனால் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது கௌதமன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக வாங்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details