தமிழ்நாடுஅரசின் உத்திரவுப்படி, மாநிலம் முழுவதும் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டு அணியாமல் வாகனம் ஒட்டுபவர்களை போக்குவரத்து காவல் துறையினர் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இதேபோல் கரூர் நகர போக்குவரத்து காவலர்கள் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த சொகுசு கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு வேகமாக சென்றது. இதையறிந்த போக்குவரத்து காவலர்கள் சினிமா பாணியில் காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.
சீட் பெல்ட் அணியாமல் காரில் வந்து சேட்டை செய்த குடிமகன் கைது
கரூர்: குடிபோதையில் சேட்டை செய்த குடிமகனை போக்குவரத்து காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் ரகளையில் ஈடுபடும் குடிமகன்
பின்னர் அவரிடம் விசாரித்த போது, நெரூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பதும், சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்திற்கு காருடன் அழைத்து சென்ற காவலர்கள் அவருக்கு அபராதம் விதித்தனர். இதற்கு முன்னதாக வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.