தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜனவரி 3ஆம் தேதி ஸ்டாலின் கரூர் பயணம்! - stalin election campaign

கரூர் மாவட்டத்தில் ஜனவரி 3ஆம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தரவுள்ளார் என மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

dmk senthil balaji about stalin programs
dmk senthil balaji about stalin programs

By

Published : Dec 30, 2020, 4:13 PM IST

கரூர்: மாவட்டத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் ஜனவரி 3ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறார்.

கரூர் மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி இன்று (டிசம்பர் 30) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கரூர் மாவட்டத்தில் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் திமுக தலைவருக்கு நொய்யல் குறுக்கு சாலை, கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள திருக்காம்புலியூர் பகுதியில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா, வெங்கமேடு, அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாங்கல் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று, பின்னர் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மாயனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டவுள்ளது.

கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி பேட்டி

ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் அந்தந்த கிராமப் புறங்களிலுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பார்கள்” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details