அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பாக வட மாநிலங்களில் கலவரங்களும் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக கரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு திமுக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.