தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுகவினர் தன்னை மிரட்டினார்கள்'- கரூர் தேர்தல் அதிகாரி பரபரப்பு புகார்!

கரூர்: திமுகவைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டவர்கள் நடு இரவு, வீட்டிற்கு வந்து தன்னை மிரட்டியதாக கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

'திமுகவைச் சேர்ந்தவர்கள் தன்னை மிரட்டினார்கள்'- கரூர் தேர்தல் அதிகாரி பரபரப்பு புகார்!

By

Published : Apr 16, 2019, 2:13 PM IST


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் நாளை மறுதினம் நடக்க இருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 22 சட்டப்பேரவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் அன்றைய தினமே நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், " கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தூண்டுதலின் பெயரில், திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் நூற்றுக்கணக்கான நபருடன் நடு இரவு 12 மணிக்கு வீட்டிற்கு வந்து தன்னை மிரட்டினார்" என பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

கரூர் தேர்தல் அதிகாரி

ABOUT THE AUTHOR

...view details