தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்தவர்; உடலை தகனம் செய்ய எதிர்ப்பு - karur latest news

கரூரில் கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

karur
karur

By

Published : Apr 15, 2020, 11:59 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 96 வயது முதியவர் கரோனா தொற்று காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடலை கரூர் மாவட்டம் பாலம்மாள்புரம் எரிமாயனத்தில் தகனம் செய்ய காவல் துறையினர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் துறையினர்

அதனால் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாங்கல் பாலம்மாள்புரம் ஐந்து ரோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கரூர் நகர காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை அடக்கம் செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:'கரோனாவுக்கு 308 நபர்கள் உயிரிழப்பு' - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்!

ABOUT THE AUTHOR

...view details