தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவப் பணியாளர்களுக்கான பிரத்யேக ஆடை தயாரிப்பு! - கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கான பிரத்யோக ஆடை

கரூர்: கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான பிரத்யேக ஆடை தயாரிப்பு மும்மரமாக நடைபெற்றுவருகிறது.

கரூரில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கான பிரத்யோக ஆடை தயாரிப்பு!
கரூரில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கான பிரத்யோக ஆடை தயாரிப்பு!

By

Published : Apr 6, 2020, 10:09 AM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் தேவையான பிரத்யேகப் பாதுகாப்பு கவச ஆடையினை கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இரு தனியார் நிறுவனங்கள் தயாரித்துவருகின்றன.

நான் ஓவன் துணிகளை வைத்து தயாரிக்கப்படும் பாதுகாப்புக் கவச ஆடைகள், காற்று கூட உள்ளே போக முடியாத அளவிற்கு தயாரிக்கப்பட்டுவருகின்றன.

மருத்துவப் பணியாளர்களுக்கான பிரத்யேக ஆடை தயாரிப்பு!

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், பணியாளர்களுக்கு வைரஸ் தொற்றுத் தாக்காமல் தடுப்பதற்கு, இந்த ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆடைகளை ஆறிலிருந்து எட்டு மணி நேரம் வரை பயன்படுத்த வேண்டும்.

இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் ஆடைகள், திருச்சி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆடை வடிவமைப்பில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...மின் சாதனங்கள் வெடிக்கும் என்ற பயம் வேண்டாம் - அமைச்சர் தங்கமணி!

ABOUT THE AUTHOR

...view details