தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: ரத்த மாதிரி எடுக்கும் பணிகளைப் பார்வையிட்ட கரூர் ஆட்சியர்

கரூர்: சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ள நபர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் பார்வையிட்டார்.

ரத்த மாதிரி எடுக்கும் பணியில் மருத்துவர்கள்
ரத்த மாதிரி எடுக்கும் பணியில் மருத்துவர்கள்

By

Published : Apr 17, 2020, 12:26 PM IST

கரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகச் சந்தேகப்பட்ட நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களது பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறி இருக்கிறதா என ரத்த மாதிரி பரிசோதனைசெய்யப்பட்டது.

இந்தப் பரிசோதனையில் சிறப்புப் பயிற்சிப்பெற்ற 27 பரிசோதகர்களும், 10 மருத்துவர்களும், 15 செவிலியரும் என மொத்தம் 52 நபர்கள் ஈடுபட்டனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டார்.

ரத்த மாதிரி எடுக்கும் பணியில் மருத்துவர்கள்

அப்போது மருத்துவர்கள் ஆட்சியரிடம் இதுவரை சுமார் 1600 நபர்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெறுவதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் பெண் ஒருவருக்கு கரோனா உறுதி

ABOUT THE AUTHOR

...view details