கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டி, புன்னம்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புன்னம்சத்திரம் கடைவீதியில் சாலையில் இறங்கி வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
'எனது வீடு எப்பொழுதும் உங்களுக்காக திறந்தே இருக்கும்..!' - ஜோதிமணி உருக்கம் - கை சின்னம்
கரூர்: "எனக்கு அனைவரும் சமம். எனது வீடு எப்பொழுதும் உங்களுக்காக திறந்தே இருக்கும்" என்று தேர்தல் பரப்புரையில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உருக்கமாக பேசினார்.
பின்பு அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பேசுகையில், "பத்தாண்டுகள் கரூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர், தண்ணீர் பிரச்னையை தீர்க்கவில்லை. அதனால்தான் மக்கள் குடங்களுடன் தம்பிதுரையை முற்றுகையிடுகின்றனர். நானும் ஒரு பொண்ணு என்பதால், தண்ணீருக்காக அலையும் கஷ்டம் எனக்கு தெரியும்.
எனது பூர்வீக வீட்டை தவிர மற்ற சொத்துக்கள் எனக்கு கிடையாது. வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகளுக்கு பின்பும் இதே சொத்துக்கள் மட்டுமே இருக்கும். அதனால் என்னை நம்பி நீங்கள் வாக்களிக்கலாம். நான் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன். எனக்கு அனைவரும் சமம். அதலால் எனது வீடு எப்பொழுதும் திறந்தே இருக்கும். நீங்கள் போய் அதிமுகவினர் வீட்டுக்கு சென்று கை சின்னத்தில் எனக்காக வாக்கு கேளுங்கள்" என்றார்.