கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அந்த தொகுதியில் இருக்கும் உள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பெண் குழந்தைக்கு பிரியங்கா என பெயர் சூட்டிய காங்கிரஸ் வேட்பாளர் - வேட்பாளர்
கரூர்: கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பரப்புரையின்போது பெண் குழந்தைக்கு பிரியங்கா என பெயர் வைத்தார்.
நேற்று அவர் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, புலியூரை அடுத்த புரவிபாளையத்தில் வசிக்கும் தினேஷ் பாபு, ஹேமாமாலினி தம்பதியினர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு ஜோதிமணியிடம் கேட்டுக்கொண்டனர். அதனையடுத்து அந்த பெண் குழந்தைக்கு ஜோதிமணி, 'பிரியங்கா' என பெயர் சூட்டினார்.
ஜோதிமணி வாக்கு சேகரிக்க செல்லும் இடத்தில் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் என அனைவரிடமும் அவர் நெருங்கிப் பழகி வருகிறார் என பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.