கரூர் மாவட்டம், பசுபதி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் சணப்பிரட்டி செல்லும் சாலையோரம் மணிகண்டன் என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு பயம் ஏற்படுத்தும் வகையில் பெரிய நீளமான பட்டாக் கத்தியை கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி ரகளையில் ஈடுபட்டனர்.
பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டியவர் கைது! - காவல் துறையினர்
கரூர்: பொது இடத்தில் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
cake-cutting
இது குறித்து வாகன ஓட்டிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மணிகண்டன் உட்பட பலரை கைது செய்தனர். பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதில், தலைமறைவான சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.