தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவரை பேருந்திலிருந்து நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர்! - நடத்துநர்

கரூர்: அரசுப் பேருந்தில் ஏறிய மீனவரையும், அவரது மனைவியையும் நடுவழியில் நடத்துநர் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்

By

Published : Mar 7, 2019, 7:57 PM IST

கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாயனூர் பகுதியைச் சேர்ந்த மீன் பிடிக்கும் தொழிலாளி, அவருடைய மனைவி அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனர்.

அப்போது நடத்துநர், அவர்களிடம் மீன் உள்ளதாக கூறி கீழே இறங்க வற்புறுத்தியுள்ளார். மீனவர்கள் நடத்துநரிடம் தங்களிடம் மீன்கள் இல்லை வெறும் மீன் பிடிக்கும் வலைதான் இருக்கிறது எனக் கூறியபோதும் அரசு பேருந்து நடத்துநர் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் மீனவரும், அவருடைய மனைவியும் திருச்சி செல்லும் தனியார் பேருந்தில் ஏறி மாயனூர் சென்றனர். தற்போது இதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

மீனவரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டு சென்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details