கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட வழுக்குத்துறை பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்வரன்(21). இவர் இன்று மதியம் அரவக்குறிச்சியில் இருந்து வழுக்குத்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தார். வழுக்குத்துறை அருகே வந்த போது, முன்சென்ற லாரியை லோகேஷ்வரன் முந்தி செல்ல நினைத்து, வேகமாக சென்றதில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மோதி பைக் விபத்துக்குள்ளானது.
லாரியை முந்த முயன்று உயிரை விட்ட இளைஞர் - கரூர் அருகே சோகம் - accident
கரூர்: இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், லாரியை முந்த முயன்று விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
accident
இந்த விபத்தில் லோகேஷ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.