கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இவர் இன்று 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
அதிமுகவில் இணைந்த வழக்கறிஞர் கூட்டமைப்பின் இணைத் தலைவர்!
கரூர்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் இணைத் தலைவர் மாரப்பன் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகாவில் இணைந்த வழக்கறிஞர் கூட்டமைப்பின் இணைத் தலைவர்!
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் கூட்டமைப்பின் இணைத் தலைவர் மாரப்பன் கூறுகையில். “அதிமுகவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற வெகு நாள் விருப்பம் தற்போது நிறைவேறியிருக்கிறது” என்றார்.
இவர், திமுக வழக்கறிஞர் பிரிவில் பணியாற்றியவர் என்பதும் பார் கவுன்சில் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.