தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர்-14ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும், அதிக சத்தங்களை எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் விபத்தில்லா தீபாவளிக்காக கரூர் மாவட்ட தீயணைப்பு நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்புத்துறையினர்! - awareness rally was held
கரூர்: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியானது வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தொடங்கி ஜவஹர் பஜார், கோவை சாலை, பேருந்து நிலையம் வழியாகச் சென்று மீண்டும் தீயணைப்பு நிலையத்திற்கு வந்தடைந்தது.
இந்தப் பேரணியில் தீயணைப்பு நிலைய அதிகாரிகள், தீயணைப்புத்துறை வீரர்கள் வாகனங்களுடனும், நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுடனும் கலந்து கொண்டனர். அப்போது விபத்தில்லா தீபாவளியை கொண்டாட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.