தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் வேட்புமனு தாக்கல்! - சட்டப்பேரவைத் தேர்தல் 2021

கரூர்: கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.ஆர். விஜயபாஸ்கர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தேர்தல் நடத்தும் அலுவரிடம் வேட்புமனுவினைத் தாக்கல்செய்தார்.

Arrived in procession with party volunteers and MR. Vijaya Bhaskar files nomination
Arrived in procession with party volunteers and MR. Vijaya Bhaskar files nomination

By

Published : Mar 15, 2021, 10:07 PM IST

முன்னதாக கோடங்கிபட்டி, ராயனூர், திருமாநிலையூர், லைட்ஹவுஸ் கார்னர், கரூர் கடைவீதி வழியாக ஊர்வலமாக வந்த அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் மனு தாக்கல்செய்தார்.

இந்நிகழ்ச்சியின்போது அதிமுக கொள்கைபரப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, அதிமுக கரூர் வடக்கு நகரச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

எம்.ஆர். விஜயபாஸ்கர் வேட்புமனு தாக்கல்

வேட்புமனுவினைத் தாக்கல்செய்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வேட்பாளருக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க: ஏப்ரல் 6 அன்று ஊதியத்துடன் விடுமுறை: தொழிலாளர் ஆணையம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details