தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு சேகரிப்பில் முனைப்பு காட்டும் அண்ணாமலை - தலித்

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பட்டியலினத்தவர் குடியிருப்பில் இரவு முழுவதும் தங்கி வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பில் முனைப்பு காட்டும் அண்ணாமலை
வாக்கு சேகரிப்பில் முனைப்பு காட்டும் அண்ணாமலை

By

Published : Apr 3, 2021, 3:23 PM IST

கரூர்: பாஜக மாநிலத் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மொஞ்சனூர் ராமசாமி மகன் மொஞ்னூர் இளங்கோ போட்டியிடுகிறார்.

பாஜக திமுகவுக்கு இடையே நேரடி போட்டி உள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் அதிகமாக இஸ்லாமியர் வாக்குகளைக் கவர்வதற்கு, அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் உள்ள இஸ்லாமிய பெண்களிடம் முத்தலாக் சட்டத்தின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

இதேபோல அரவக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ள பட்டியலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு பாஜக வேட்பாளர் அண்ணாமலை அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வேட்டமங்கலம் ஊராட்சி சேமங்கி செல்வநகர் அருந்ததியர் குடியிருப்பில் வசிக்கும் வாகன ஓட்டுனர் பாலு வீட்டில் இரவு முழுவதும் தங்கியிருந்தார்.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை தங்கள் பகுதியில் இரவு தங்கி இருப்பதை அறிந்து அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் அவரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். இன்று காலை எழுந்து சுமார் 6 மணியளவில் தேனீர் அருந்திவிட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்பொழுதுஅவர், இது போல மிகவும் எளிமையாகவும் நேர்மையாகவும் உங்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவேன் என தெரிவித்தார்.

வாக்கு சேகரிப்பில் முனைப்பு காட்டும் அண்ணாமலை

இதுகுறித்து பாஜக வேட்பாளர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் டிரைவர் பாலு தெரிவிக்கையில்:

ஏழையின் வீட்டில் இறைவனை காணலாம் என்பார்கள். அண்ணாமலை எங்கள் வீட்டில் தங்கி எங்கள் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டு எங்கள் பகுதி மக்களோடு சகஜமாகப் பேசிப் பழகியது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. இவரைப் போன்றவர்கள் எங்கள் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டுமென விரும்புகிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனக்கு இரவு தங்க வாய்ப்பளித்த பாலு குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, தென்னிலை அருகே பரப்புரை மேற்கொள்ள கிளம்பிச் சென்றார்.

ABOUT THE AUTHOR

...view details