ஐபில் போட்டிகள் என்றாலே பரபரபப்பும் சுவாரஸ்யங்களும் இருக்கும். இந்த ஐபிஎல்லில் மறக்க முடியதா ஒரு சம்பவம் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் போட்டியின் நடுவே தோனி கோபப்பட்டதுதான்.
அந்த போட்டியில் கடைசி ஓவர் பரபரப்பில் நடுவர் நோபால் என அறிவத்து பின்னர் முடிவை திரும்ப பெற்றார். இதனால் அப்போட்டியில் லேசான குழப்பம் நிலவியது. இதை எல்லைக் கோட்டுக்கு வெளியே நின்று கவனித்து கொண்டிருந்த தோனி பொறுமை இழந்தார்.
பின் ஒருகட்டத்தில் மைதனாத்திற்குள் வேகமாக சென்று நடுவர்களிடம் ஆக்ரோஷமாக விவாதம் செய்தார் தோனி. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. கூல் கேப்டன் தோனியா கோபப்பட்டது என்று ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இந்நிலையில் நடுவரிடம் தோனி வாக்குவாதம் செய்யும் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை கரூர் - நாமக்கல் பகுதியில் ஓடும் ஒரு பேருந்தில் ஒவியமாக வரையப்பட்டுள்ளது.
இப்பேருந்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியின் கோபத்தையும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.